யாழில் 5ஆயிரத்து 731பேர் தனிமைப்படுத்தலில்?கோரொனா தொற்று கட்டுப்பாட்டினுள் வந்திராத நிலையில் யாழ். மாவட்டத்தில்  5,731 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா தொற்றுக்குள்ளாகிய  26 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தொற்று  உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த  5,731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


No comments