தமிழரசு:ஒன்றுக்குள் ஒன்றானது!


தமிழரசு தலைவர் மாவையின் மகன் கலைஅமுதனிற்கும் மாமனிதர் ரவிராஜ் அவர்களது மகள் பிரவீணாவிற்கும் இன்று பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது.

ரவிராஜ் கொல்லப்பட்ட நிலையில் அஞ்சலி செலுத்த வந்திருந்த மாவை அப்போதே ரவிராஜ் குடும்பத்துடன் உறவு புதிய பரிமாணம் பெறுமெ ஆரூடம் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது  ஏமாற்றப்பட்ட சசிகலா ரவிராஜ்ஜிற்கு உதவியாக மாவை மகன் பணியாற்றியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பரிணமித்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.

பிரவீணா முன்னணி நிறுவனமொன்றில் பணிப்பாளராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments