சி.வி வாக்களிப்பில் பங்கெடுக்காமை:பொய் செய்தியென்கிறார் சுரேஸ்?

இந்திய அரசினது கோரிக்கையின் பேரில் இலங்கை அரசின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காது புறக்கணித்ததாக

சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுரேஸ்பிறேமச்சந்திரன் மறுதலித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொய்ப்பிரச்சாரம் இதுவெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் எனது 17வருட நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் இந்தியாவாயினும் சரி அல்லது எந்தவொரு நாடாயினும் சரி அவ்வாறு அழுத்தங்களை  தந்ததில்லை.

அவ்வாறான அழுத்தங்களிற்கு இடம்கொடுக்க வேண்டிய தேவையும் தமிழ் தரப்புக்களிற்கு தற்போதில்லை.

ஆயினும் இவ்வாறான நோக்கங்கருதிய பொய்களை பரப்புவது அரசியல் பின்னணி கொண்ட அந்த ஆங்கில ஊடகத்திற்கு தேவையாக இருக்கலாமெனவும் தெரிவித்தார்.

இதனிடையே கூட்டமைப்பிற்கும் தமிழ் மக்கள் கூட்டணிக்குமிடையே மாகாணசபை தேர்தலை முன்னிறுத்தி பேச்சுக்கள் நடக்கின்றதென்பது பொய்யான இட்டுக்கட்டப்பட்ட கதையென தெரிவித்த அவர் அவ்வாறான எத்தகைதொரு பேச்சும் நடத்தப்படவில்லையெனவும் மறுதலித்தார்.


No comments