கோத்தா கோபிக்க விடமாட்டேன்:டக்ளஸ்!கோத்தபாய கோபம் கொள்ள அனுமதிக்கமாட்டேன் என விளக்கமளித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா.


இந்தியாவில் மத்திய ஆட்சியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தமிழகத்தல் ஆட்சியில் இருக்கின்ற அ.தி.மு.க. இடையில் ஒரு உறவு காணப்படுகின்றது. 

மறுபுறத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் உட்பட தற்போதைய எமது அரசாங்கத்தின் நகர்வுகள் சில மோடி அரசாங்கத்தினால் திருப்தியடையும் வகையில் இல்லை என்பதை இந்தியத் தரப்புக்களுக்கு சார்பானவர்கள் வெளிப்படுத்ததுகின்ற கருத்துக்களில் இருந்து உணரக் கூடியதாக இருக்கின்றது.


எம்மைப் பொறுத்த வரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவருமே பக்கம் சாராத நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையையே இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கும் என்பதை தெளிவாக தெரிவித்திருக்கின்றனர்.


இருப்பினும் எமக்கு பொருளாதார ரீதியில் உதவ முன்வருகின்றவர்களை வரவேற்க வேண்டிய தேவையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் காணப்படுகின்றன.


உதாரணத்திற்கு அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் என்னைச் சந்தித்து தங்களுடைய அபிவிருத்தி திட்டத்தில் எவ்வாறான கடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை மற்றம் கடற்றொழிலாளர்களின் வாழ்வதார மேம்பாடு தொடர்பான திட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார். கடற்றொழில் சார் மக்களின் நலன்சார்து இணைந்து செயற்படுவதற்கான எனது விருப்பத்தினையும் வெளிப்படுத்தியிருந்தேன்.


பின்னர் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகின்ற போது அமெரிக்காவிற்கு சமர்ப்பிக்கின்ற அபிவிருத்தி தொடர்பான வேலைத் திட்டங்கள் பூகோள அரசியல் நகர்வுகளினுள் சிக்கிக் கொள்ளாத வகையில் இருக்க வேண்டும் என்ற தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றேன்.


இவ்வாறான விடங்களில் எனக்கு நிறைந்த அனுபவமும் நிறைவான புரிதலும் இருக்கின்றது. இப்போது மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலும் பாலஸ்தீனம் போன்ற வெளிசக்திகளின் ஒத்தசைகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் அவை எவையும் இந்திய நலனை பாதிக்கக் கூடாது என்பதில் தெளிவாத இருந்தேன். இந்த விடயத்தினை அப்போதைய இந்தியத் தலைவர்களும் திட்ட வகுப்பாளர்களும் புலனாய்வு அதிகாரிகளும் நன்கு பரிந்து வைத்திருந்தனர்


இதுபோன்றுதான் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடும் இருக்கின்றது. எங்களுடைய மக்களின் தேவைகள் – நலன்கள் சார்ந்து அனைத்து தரப்பினருடனும் இணக்கமான போக்கு கடைப்பிடிக்கப்படுவதாகவே நம்புகின்றேன் என டக்ளஸ் தெரிவித்துள்ளார்.


No comments