மோதல் தொடர்கிறது:கொரோனாவை கட்டுப்படுத்த காலம் வேண்டுமாம்?


இலங்கை அரசு கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார துறையை நம்புவதைவிட படைகளே நம்பிவருகின்றது.

இந்நிலையில் நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியும் அரசாங்கமும் முப்படையினரும் சுகதாரஅதிகாரிகளும் நாட்டிலிருந்து கொரோனாவை ஒழிப்பதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் என கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.


கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பகுதியை அடையாளம் கண்டபின்னர் சுகாதார அதிகாரிகளும் புலனாய்வு பிரிவினரும் நோய் எவ்வாறு பரவுகின்றது என்பதை கண்டுபிடித்து அதனை தடு;ப்பதற்கான நடவடிக்கைகளை எடு;க்கின்றனர் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அதனை பின்னர் அந்த பகுதியை முடக்குவதற்கு தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.


No comments