யாழில் பாரதியின் நினைவேந்தல்?


மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழில் இன்று இடம் பெற்றது.

யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுளள பாரதியார் நினைவுச் சிலை அடியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பாரதியார் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


பாரதியார் நினைவுத் தூபிக்கு இந்திய துணைத் தூதுவர் மலர்மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பாரதியாருக்கு மலர்மாலை அணிவித்தனர்.

இதன் பின்னர் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சிவிகேஎஸ் சிவஞானம் யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னால்ட் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன் சிவாஜிலிங்கம் அனந்தி சசிதரன் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


No comments