சுவீடனில் கொரோனவும் பரிந்துரைகளும்!!


கொரோனா தொற்று நோய் அதிகமாகப் பரவிவருவதால் சுவீடனில் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் ஸ்டீபன் லோஃப்வென்

சுவீடன் தனது மூன்று பெரிய நகரங்களுக்கு கடுமையான பரிந்துரைகளை அறிவித்துள்ளது. ஸ்டாக்ஹோம், கோதன்பர்க் மற்றும் மால்மோ நகரங்களை உள்ளடக்கிய நான்கு பிராந்தியங்கள் கட்டுப்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

1. அத்தியாவசியமற்ற கடைகளிலிருந்து விலகி இருப்பது.

2. பொதுப் போக்குவரத்துக்களைத் தவிர்ப்பது. 

3. உடல்பயற்சி நிலையங்கள் மற்றும் அருங்காட்சியங்களைத் தவிர்ப்பது.  

4. உணவகங்கள் மற்றும் தேநீர் அருந்தகங்களில் அமர்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை 8 பேராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

5. முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்வது.

என புதிய வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் எதிவர்ரும் நடவம்பர் 17ஆம் திகதி அல்லது 19ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என தெரிவருகிறது.

ஸ்வீடன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 31 கோவிட் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 5,969 ஆக உள்ளது. இது அண்டை நாடுகளை விட மிக அதிகம்.

இதுவரை நாடு தழுவிய முடக்க நிலையில்லாத நாடாக சுவீடன் இருந்துவந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments