மரடோனா மருத்துவமனையில் அனுமதி


உதைபந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனாவுக்கு மூளையில் இரத்த உறைவு இருப்பதால் அவர் அறுவைச் சிகிற்சை செய்யவுள்ளார் என அவரது மருத்துவர் கூறியுள்ளார்.

60 வயதான மரடோனா இரத்தச் சோகை மற்றும் நீரிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை புவெனஸ் அயர்சில் உளள் இபென்சா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவைச்சிகிற்சைக்காக அவர் பிளாட்டாவில் உள்ள ஒலிவோஸ் மருந்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். செய்வாக்கிழமை உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு அவருக்கு அறுவைச் சிகிற்சை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது 60 பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

No comments