நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை

மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 22-11-2020 ஞாயிற்றுக் கிழமை அன்று  மாலை 6.30 மணியளவில் Threekings fickling convention centre எனும் இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நிகழ்வாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடரினை வீர வேங்கை தமிழரசியின் தாயார் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. பின்னர் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவீரர் பணிமனை பொறுப்பாளர்  அசோக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தயாகரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. இதனை தொடர்ந்து மாவீரர் தீசன் 

அவர்களின் சகோதரர் வரதன்,  தனது சகோதரரின்  கடந்தகால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் மாவீரர் குடும்ப உறவுகளுக்கு நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நினைவுப் பொருள் வழங்கப்பட்டது.

ஈழம் அடையும் வரை ஓயோம் என்ற உறுதி மொழியுடன் மாவீரர் கானம் இசைக்க நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது. இறுதியாக விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது. மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் 60ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து  கொண்டது குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்வானது, இழந்த உறவுகளின் உயிர்த்தியாகங்களை எவராலும் விலைபேசிட முடியாது என்பதை பறைசாற்றி நிற்கின்றது. மக்களின் இந்த அன்பினையும், மாவீரர் மீதான பற்றுதலையும் மேலும் மேலும் உரிமையுடன் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் வேண்டி நிற்கிறார்கள். 

No comments