நோர்வே மாவீரர் நாள்

எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2020 இந்த வருடம் Rommen Sletta, Haavard Martinsens vei 35 இல் அமைந்துள்ள

வெளிமைதானத்தில் நடைபெறும்.

மாவீரர்நாள் நிகழ்வுகள்  தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் இந்த நெருக்கடியான தொற்று சூழ்நிலையிலும் politi, bydelsoverlege மற்றும் Klubb leder ஆகியோரின் அனுமதியுடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வருட மாவீரர்நாள் நிகழ்வுகள் தற்போதைய தொற்று விதிகளுக்கமைய 200 பேருடன்தான் வெளிமைதானத்தில் நடைபெறும். வரும் மக்களும் பகுதி பகுதியாக வந்து வணக்கம் செலுத்தக்கூடிய வகையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இந்த வருட தேசிய மாவீரர் நாள் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகிறது.

எல்லா மக்களும் எங்களுக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அறிவுறுத்தலிற்கமைய நடக்குமாறு வேண்டிநிற்கிறோம்.

இந்த வருட மாவீரர் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் அறிவுறுத்தல்கள் தமிழ்முரசம் வானொலியிலும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Viber குழுமத்திலும் தொடர்ச்சியாக அறியத்தரப்படும்.


மாவீரர்நாள் ஒழுங்குகள் 2020 

அனைவருக்கும் வணக்கம்!

இந்தவருடம் மாவீரர்நாள் நிகழ்வுகள் எமக்குத்தரப்பட்ட விதிமுறைகளுக்கு

அமைய 200 பேருடன் மட்டுமே நடைபெறும். இதுவரை மாவீரர்நாளிற்கு உங்கள் வருகையை உறுதிப்படுத்தாத மாவீரர்குடும்பத்தினர், விரைவில் மாவீரர்பணிமனைப்பொறுப்பாளர் நிமல் மற்றும் நாதனுடன் தொடர்புகொண்டு உங்கள்வரவை உறுதிப்படுத்தவும். உங்களின் முன்பதிவு அவசியமானது.

மாவீரர்நாள் நிகழ்வு மாவீரர்குடும்பத்தினருடன் சரியாக 12:45 மணிக்கு ஆரம்பமாகும்.  முன்பதிவு செய்யப்பட்ட பொதுமக்கள் வணக்கம் செய்வதற்கு 14:30 மணியிருந்து 15:30 மணிவரை பகுதி பகுதியாக அனுமதிக்கப்படுவார்கள்.

நிகழ்வு ஒழுங்குகள்

12:45 – 14:30 மணி 100 பேர்வரை முன்பதிவுசெய்யப்பட்ட மாவீரர்குடும்பம்

14:30 – 15:00 மணி 50 பேர்வரை முன்பதிவுசெய்யப்பட்ட பொதுமக்கள்

15:00 – 15:30 மணி 50 பேர்வரை முன்பதிவுசெய்யப்பட்ட பொதுமக்கள்

பொதுமக்கள் பதிவுகளை இன்றிலிருந்து மேற்கொள்ளலாம்

மாவீரர்குடும்பம் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

நிமல் 928 52 541  /  நாதன் 419 30 186

பொதுமக்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

செல்வம்  967 08 709  / சொக்கன்  469 07 690

இளங்கோ 997 07 662  / செல்லக்கனி 462 29 999 / விஜி  413 69 881

“முன்பதிவுசெய்யப்பட்டவர்கள் மட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளமுடியும்”

இடம்:       றொம்மன் மைதானம் (விளையாட்டுத்திடல்) ஸ்ரொவ்னர்

Adresse: Rommen Sletta, Haavard Martinsens vei 35,  0978 Oslo

 ஒழுங்கமைப்பு: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு




No comments