மாட்டுடன் மோதியதில் இளைஞர் படுகாயம்!


வவுனியா சூடுவெந்தபுலவு பிரதேச வீதியில் உந்துருறுளியில் பயணித்துக்கொண்டிருந்து இளைஞன் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.40 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

வேலையை முடித்துக்கொண்டு வவுனியா செட்டிக்குளம் வீதியூடாக வீரபுரம் நோக்கிப் சென்றுகொண்டிருந்த மாட்டுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இளைஞன் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments