செங்கனை மறுபரீசீலனை செய்ய வேண்டும் - மக்ரோன்


ஐரோப்பாவின் திறந்த எல்லையான செங்கன் பகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மற்றும் ஆஸ்ரோியாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராங்கோ-ஸ்பானிஸ் எல்லைக்குப் பயணம் செய்தபோது அவர் இக்கருத்தினை முன்வைத்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்:

ரோப்பாவின் திறந்த எல்லை எல்லையான ஷெங்கன் பகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்நாடுகளின் வெளிப்புற எல்லைகளை இன்னும் வலுவான பாதுகாப்புக்கு உட்படுத்த வேண்டும்.

இரகசிய குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் தேவை. ஐரோப்பாவிற்குள் குடியேறியவர்களை சட்டவிரோதமாக கடத்தும் குற்றவியல் கும்பல்கள் பெரும்பாலும் பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் தொடர்புபட்டுள்ளன.

ஷெங்கன் அதன் அமைப்பை மீண்டும் சிந்திக்கவும், எங்கள் பொதுவான எல்லைப் பாதுகாப்பை சரியான எல்லைப் படையுடன் வலுப்படுத்தவும் அதற்கான மாற்றத்திற்கு ஆதராவாக நான் இருக்கின்றேன்.

டிசம்பர் மாதம் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகளுக்கு திட்டங்களை முன்வைப்பேன்.

கடந்த வாரத்தில் செங்கன் உறுப்பு நாடுகளில் சுதந்திரமாக நகர்ந்து இரண்டு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளன.

அக்டோபர் 29 இல் ஒரு துனிசிய நபர் நீஸில் ஒரு தேவாலயத்தில் மூன்று பேரைக் கொன்றார். 

ஐந்து வாரங்களுக்கு முன்னர், வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு பிரஹிம் அவுஸ்ஸவி வந்திருந்தார். பிரதான நிலப்பகுதிக்கு மாற்றப்பட்ட பின்னர தனது தாக்குதலைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் தொடருந்தில் பிரான்சுக்குச் வந்தார்.

கடந்த திங்கட்கிழமை வியன்னாவில் நான்கு பேரைக் கொன்ற ஜிஹாதி வெடிமருந்துகளை வாங்கும் முயற்சியாக யூலை மாதம் அண்டை நாடான ஸ்லோவாக்கியாவுக்குச் சென்றதாக ஆஸ்திரிய அதிகாரிகள் தெரிவித்தனர்

சமீபத்திய தாக்குதல்கள் ஐரோப்பாவிற்கு பயங்கரவாத ஆபத்து எல்லா இடங்களிலும் உள்ளது என்பதை எச்சரிக்கின்றது என மக்ரோன் மேலும் எடுத்துரைத்துள்ளார்.

No comments