மரடோனாவின் மருத்துவர் மீது விசாரணைகள் ஆரம்பம்


உதைபந்தாட்ட உச்சநட்சத்திரமான மரடோனா உயிரிழந்தமை தொடர்பில் அவரது மருத்துவர் மீது ஆர்ஜென்ரினா  நாட்டின் அரச சட்டத்தரணிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மரடோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிற்சை தொடர்பில் ஏதாவது அலட்சியம் நடந்ததா? என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பியூனஸ் அயர்ஸில் உள்ள காவல்துறையினர் மருத்துவர் லியோபோல்டோ லூக்கின் வீடு மற்றும் தனியார் மருத்துவமனையில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

60 வயதுடைய மரடோனா சத்திரசிகிற்சை செய்யப்பட்டு குணமடைந்துகொண்டிருந்த போது அவர் வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மருத்துவர் லூக் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. அதேநேரம் அவர் எந்தத்தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளார்.

மரடோனா நவம்பர் மாத தொடக்கத்தில் மூளை இரத்த உறைவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தார். மற்றும் மது அடிமை தொடர்பில் அவருக்கு சிகிற்சை வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது,

No comments