கொரோனாவுக்குள் ஆட்டம்?

 லங்கா பிரீமியர் கிரிக்கெட் (#LPL) தொடரை நடத்துவதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

போட்டியின் தலைவர் ரவின் விக்ரமரத்ன (Ravin Wickramaratne) தெரிவிக்கையில்லங்கா பிரீமியரில் பங்கேற்கும் வீரர்கள் 7 நாள் தனிமைப்படுத்தல் காலத்திற்கு செல்ல வேண்டும், அதே நேரத்தில் ஒளிபரப்பு பணியாளர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுவார்கள்.


அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் உள்ள Mahinda Rajapaksa Stadium இல் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் 13 வரை நடைபெற உள்ளன,


சுகாதார அமைச்சு நாளை போட்டிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்

No comments