இலங்கையில் மேலும் ஜவர் மரணம்?

 


நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு-02 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபரொருவர்,வெல்லம்பிட்டியை சேர்ந்த 68 வயதுடைய நபர் மற்றும் கொழும்பு 12 இனை சேர்ந்த 58 வயதுடைய குடும்பஸ்தர்,கொழும்பு 14இனை சேர்ந்த, 73 வயதுடைய குடும்பஸ்தர்,கொழும்பு 15 , 74 வயதுடையவரென இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனா நோய்த்தொற்றினை அடையாளம் காண இராணுவம் பி.சி.ஆர் சோதனைகளைத் தொடங்கவுள்ளது.

பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்காலத்தில் இராணுவம் தலையிடும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோதபய ராஜபக்சவும் இராணுவத்திற்கு பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்கியிருப்பதாகவும், அதற்கேற்ப பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


No comments