யாழ்.போதனா அறிக்கைக்கும் அனுமதியில்லை?ஏற்கனவே யாழ்.பல்கலைகக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்பட்ட கொவிட் தொற்று மருத்துவ ஆய்வுகளது நம்பகத்தன்மை குறித்து சர்ச்சைகள் மூண்டிருந்த நிலையில் மருத்துவ வட்டாரம் சீற்றமடைந்திருந்தது.அதனை செய்தியாக அறிக்கையிட்ட தரப்புக்கள் தொடர்பில் யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர்,பல்கலைக்கழக அப்போதைய தகுதி வாய்ந்த அதிகாரியென காவல்துறை புலனாய்வு பிரிவு வரை புகார்கள் பறந்திருந்தன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் கொரோனா தொற்று பரிசோதனையின் பெறுபேறு செல்லாது என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.அத்துடன் கொழும்பு நவலோகா தனியார் ஆய்வு கூடத்தில் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருமாறு விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்பதற்கு முன்னதாக 72 மணித்தியாலங்களிற்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட கொவிட் தொற்று பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.


இந்த நடைமுறைக்கு அமைய வடக்கில் இருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொண்ட பரிசோதனை சான்றிதழுடன் சென்ற நேரம் விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தல் சகிதம் செல்பவர்கள் விமான நிலையத்தில் தொடர்ந்து பயணிக்க அனுமதி மறுக்கப்படுகின்றது.


அவ்வாறு அனுமதி மறுக்கப்படுபவர்களை கொழும்பில் உள்ள நவலோகா வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டு அந்த சான்றிதழை பெற்று வருமாறு பணிக்கப்படுகின்றனர். 


No comments