ஊடகங்களிற்கும் கட்டுப்பாடு ?முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை இராணுவத்தினர் குறித்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலிசாரின் உதவியுடன் குறித்த ஊடகவியலாளர் வெளியேறியுள்ளார்


இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்   மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றினால்  தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான பொலிஸார் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தும் முகமாக துயிலுமில்லங்களில் இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்றநிலையிலேயே  இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருக்கின்ற வளாகத்திற்கு அன்னையாக சென்ற ஊடகவியலாளர் குறித்த  மாவீரர் துயிலும் இல்லத்தை  வீடியோ பதிவு செய்த போது குறித்த இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில் நின்ற இராணுவ வீரர்கள் இருவர் குறித்த  இடத்திற்கு வருகை தந்து யார் என ஊடகவியலாளரை  வினவியபோது ஊடகவியலாளர் என அவர் தெரிவித்ததற்கு அவருடைய ஊடக அடையாள அட்டையை கேட்டிருக்கின்றார் அதன்போது அரசாங்க தகவல் திணைக்களத்தினால்  வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை ஊடகவியலாளர் காட்டியபோது தேசிய அடையாள அட்டை கேட்டதோடு குறித்த இடத்தில் ஊடகவியலாளரோடு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது  தங்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என மிரட்டி ஊடகவியலாளரை குறித்த இடத்தில் இருந்து வெளியேற முடியாதவாறு தடை செய்திருக்கின்றனர்

இந்நிலையில் குறித்த இடத்திலிருந்து ஊடகவியலாளர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு தொடர்பு கொண்ட போது குறித்த இடத்தில் கடமையில் இருந்த போலீசார் உணவு உண்பதற்காக சென்றிருந்த நிலையில் அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி இருந்தார்


இந்நிலையில் குறித்த இடத்திற்கு போலீசார் வருகை தந்ததும் விடயங்களை தெரியப்படுத்திய போது அவர்கள் ஊடகவியலாளரை செல்வதற்கு அனுமதித்த போதும் படையினர் ஊடகவியலாளரை குறித்த இடத்திலிருந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை


இந்நிலையில் மீளவும் ஊடகவியலாளர்  போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் இராணுவ பொறுப்பதிகாரியை பொலிஸ் அதிகாரி தொடர்பு கொண்டு அதன் பின்னர் இராணுவ அதிகாரிகளுக்கு மேலிடத்தில் இருந்து வருகைதந்த உத்தரவுக்கு அமைய ஊடகவியலாளரை குறித்த இடத்திலிருந்து செல்வதற்கு அனுமதி வழங்கினர்


இவ்வாறு  சிவில் நிர்வாகம் நடைமுறையில் உள்ள போது இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை தடைசெய்து  ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்


இதேவேளை குறித்த பகுதியில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் தன்னுடைய இராணுவ சீருடையை சரியாக அணியாத நிலையிலேயே இவ்வாறு ஊடகவியலாளருடன் வருகை தந்து தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தமையும்  சுகாதார நடைமுறைகளை பேனாதநிலையிலும் இருந்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்ச்சியான இந்த செயற்பாடுகள் முல்லைத்தீவில் இராணுவ ஆட்சியா இடம்பெறுகிறது என்ற சந்தேகத்தினை உறுதி செய்கிறது 

அத்தோடு குறித்த இடத்தில் ஊடகவியலாளர் உடன் தர்க்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஊடகவியலாளர்களின் வீடியோ பதிவுகளையோ தொலைபேசியை கூட தமக்கு உங்களுடைய எங்களுக்கு தேவையான எதையும் பார்க்க முடியும் அதற்க்கு தமக்கு அதிகாரம் உண்டு எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்

No comments