விடாது துரத்தும் துன்பம்?


இலங்கைக்கு திரும்பிய சிலரை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் காயமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய சிலரை அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக அழைத்துச் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸொன்றே இவ்வாறு நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த பஸ்ஸின் முன்சில்லு திடீரென வெடித்தமையால் அப்பஸ்இ  பாதுகாப்பு வேலியில் மோதியதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இவ்விபத்துக்கு இடம்பெற்றுள்ளது.


No comments