சிங்கள மயப்படுத்தலில் கூகிளும்?கந்தரோடை கத்துறுகோட என சிங்கள பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு

கூகிள் நிறுவனம் உடந்தையாகியிருக்கின்றதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறே மாதகல் ஜம்புகோளபாடுன என்றும் இன்னும் பல தமிழர் பிரதேசங்களில் எமக்கு தெரியாமலே பெயர் மாற்றம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்.

கிழக்கிற்கென கோத்தபாய அமைத்த செயலணிக்கு தானும் வருகை தர தயார் என முரளி வல்லிபுரநாதன் சவால் விடுத்த போதும் அதற்கு புறோக்கர் வேலை செய்ய புறப்பட்ட டக்ளஸ் பதுங்கிக்கொண்டார்.

இந்நிலையில் கூகிள் நிறுவனம் உடந்தையாகியிருக்கின்றமையினை முரளி வல்லிபுரநாதன் அம்பலப்படுத்தியிருக்கின்றார்.

கூகிள் நிறுவனத்தில் பணியாற்றும் சிங்கள நபர்களை கொண்டு இத்தகைய பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments