அரசியல் கைதிகள் விவகாரம்:நாமலும் தீர்வு என்கிறார்?


மீண்டும் அரசியல் கைதிகள் விவகாரம் பேசு பொருளாகியுள்ள நிலையில்  எதிர்காலத்தில் உரிய பதிலொன்று இவ்விடயத்தில் வழங்கப்படும் என் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

'இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் உள்ளிட்ட ஆளும் தரப்பினர் கலந்துரையாடி வருகின்றனர்.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலுடனான நிலைமையின் கீழ் இது தொடர்பில் தொடர்ச்சியாகக் கலந்துரையாட முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டிய தேவையும் காணப்படுகிறது. எனினும், தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

அத்துடன், சிறைச்சாலைகளிலும் கொரோனா தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர். ஆகவே எதிர்காலத்தில் இது தொடர்பில் உரிய பதிலொன்று வழங்கப்படும்' என் நாமல் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.


No comments