மன்னார்: சந்தேகத்தில் கொலை: கொலையாளி ஏற்றுக்கொண்டார்?
மன்னாரில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை பெண் தொடர்பு சந்தேகத்தில் நடந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
கைதான , பெண் கிராம சேவகரின் கணவரே கொலையினை மேற்கொண்டதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த பெண் கிராம சேவையாளரிற்கு இரட்டை குழந்தைகள் கடந்த ஆண்டில் பிறந்திருந்தது.
அக்குழந்தைகள் மீது உயிரிழந்தவர் காட்டி வந்த அக்கறையே சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
முன்னதாக கொலையாளி அரிசி ஆலை ஒன்றை அமைக்கவும் நட்பின் அடிப்படையில் கடனாக உயிரிழந்தவர் பத்து இலட்சம் பணம் வழஙகியிருந்ததாக தெரியவருகின்றது.
கொலையாளியிடமிருந்த கைத்தொலைபேசி பிரகாரம் அவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
கொலை சம்பவத்தின் போது பயன்படுத்திய சேர்ட் இரத்த கறையுடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment