மீண்டும் துட்டகெமுனுவிடம் ஓடினார் கோத்தா?



இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டி 500 மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிரிஸவெடியவில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது.


நாட்டு மக்களும் உலக வாழ் அனைத்து மக்களும் முகம்கொடுத்துள்ள கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபடுவதற்கு ஆசிர்வாதம் வேண்டியும், ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டும் பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



சியம் நிகாயவின் மல்வத்தை பிரிவின் வட மத்திய மாகாண தலைமை சங்கநாயக்கர் அடமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறிநிவாச நாயக்க தேரரின் ஆலோசனையின் பேரில், மிரிஸவெடிய, சைத்தியாதிகாரி சங்கைக்குரிய ஈதலவெடுனு வெவே ஞானதிலக தேரரின் நெறிப்படுத்தலில், மல்வத்தை பிரிவின் அநுனாயக தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதர்ம நாயக்க தேரரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த 500 மகா சங்கத்தினர் பங்குபற்றினர்.



ஜனாதிபதி மற்றும் பிரதமர், துட்டகைமுனு மன்னரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

No comments