பஜூரோ அதிகாரிகளுக்கு கஸ்டம் தெரியாது?


நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்ச நிலையில், வடக்கு மாகாணத்தில் சொந்த மாவட்டங்களைத் தாண்டி

வெளி மாவட்டங்களுக்கு தினமும் பஸ்களில் சென்றுவரும் அரச உத்தியோகத்தர்கள், தாம் தினமும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ். மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான அரச உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு அரச பணிக்காகத் தினமும் சென்றுவருகின்றனர். ஏ9 வீதியில் பயணிக்கும் இவர்கள் வவுனியா, திருகோணமலை போன்ற மாவட்டங்களுக்குச் செல்லும் நெடுந்தூர பஸ்களை நம்பியே தினமும் அலுவலகம் சென்றுவருகின்றனர்.

கொரோனா பரம்பல் நாடு முழுவதும் தீவிரமடைந்துவரும் நிலையில் மாவட்டங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிப்பவர்கள் கோரோனா நோயாளிகளாக அடையாளங்காணப்பட்டுவந்துள்ளனர்.

அதிகாலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் தாம் பாதுகாப்பாக பஸ்களுக்காகக் காத்திருந்து இரவு வேளையிலேயே மீண்டும் வீடுகளுக்கு வந்தடைகின்றனர் எனவும் வீடுகளில் கொரோனா அச்சம் காரணமாக சுயதனிமைப்படுத்தலிலேயே தாம் வாழவேண்டியுள்ளது எனவும் குறிப்பிடும் அவர்கள், இதனால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாணம் ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமது பாதுகாப்புத் தொடர்பிலும் ஆளுநர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தலையீடு செய்து கொரோனா காலப்பகுதியில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளனர்.

No comments