தப்பியவர்கள் அகப்பட்டனரா?


அங்கொட தொற்றுநோய் வைத்தியாசாலையிலிருந்து தாயுடன் தப்பிச் சென்ற  குழந்தை எஹெலிய கொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து  கண்டு பிடித்துள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொவிட் – 19 கொரோனா தொற்றால் ஐ.டி.எச் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் குழந்தையும் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளனர் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரி வித்துள்ளது.

நோயாளி அறை 04 இல் சிகிச்சை பெற்று வந்த எஹெலி யகொட பகுதியைச் சேர்ந்த இருவருமே நேற்று இரவு 9 மணியளவில் தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 தடுப்புக் கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தாயுடன் தப்பிச் சென்ற குழந்தையை எஹெலிய கொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டு  கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் தப்பி ஓடிய கொரோனா தொற்றால் அடை யாளம் காணப்பட்ட இரண்டரை வயதுக் குழந்தை எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் எஹெலியகொட யாய வீதியில் அமைந்துள்ள வீடொன் றில் குறித்த குழந்தையை ஒப்படைத்து விட்டுத் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து,  குறித்த வீட்டில் உள்ள அனைவரும் தனி மைப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
 

No comments