பிராண்டெக்ஸ் நிறுவனமே கொரோனாவிற்கு காரணம்:மனோ?


கோவிட் 19 தொடர் மரணங்களையடுத்து இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு விசாரணைக்குழுவை நியமித்துள்ளது. இந்த குழு நியமனம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள மக்களை சமாளிக்காவா அல்லது கண்டு பிடிக்கவாவென கேள்வி எழுப்பியுள்ளார் மனோகணேசன்.

இலங்கையில் இரண்டாவது அலையை உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் பிராண்டெக்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாச்சி ஒரு குழுவையும் நிமல் சிறிபாலடி சில்வா மற்றொரு குழுவை நியமித்த போதும் குழுவினது அறிக்கைகள் பற்றி தகவல் இல்லை.

அவர்கள் நியமித்த குழு அறிக்கைகள் எங்கே? ஜனாதிபதி இந்த அறிக்கைகள் தொடர்பில் ஏன் மௌனம்? மக்களுக்கு அறிவிக்க தயங்குவது ஏன் எனவும் மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில் இரண்டாம் அலையை பிராண்டெக்ஸ் நிறுவனத்தின் டொலர் பேராசையே தோற்றுவிக்கவில்லையா? இந்திய அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய தொழிற்சாலையில் செய்யமுடியாத ஆடை ஏற்றுமதி “ஒடர்களை”, இலங்கை தொழிற்சாலையில் தைத்து முடிக்க விதிமுறைகளை மீறி, அங்கே இந்திய தொழிற்சாலையில் பணி செய்த தொழிலாளர்களை இரவோடு, இரவாக விமானம் ஏற்றி அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இரகசியமாக மத்தளை (ஹம்பன்தோட்டை) விமான நிலையத்தில் இறக்கி, மினுவங்கொடைக்கு கொண்டு வந்து, தொழிற்சாலையில் பணியில் ஈடுபடுத்தவில்லையா? கொண்டு வரப்பட்ட இலங்கை தொழிலாளர்களுடன் இந்திய தொழிலாளர்களும் வரவில்லையா? இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொரோனாவையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரவில்லையா? பிராண்டெக்ஸ்  நிறுவனம் அரசு ஆதரவு குழுமம் இல்லையா? ஆகவே இந்த உண்மைகள் அரசு ஆதரவுடன் மூடி மறைக்கப்பட்டவில்லையா? இந்த கேள்விகளுக்கு பதில்கள் எங்கே? எங்கே அந்த விசாரணை அறிக்கைகள் என மனோகணேசன் போட்டு தாக்கியுள்ளார்.


No comments