நிதியுடன் தப்பி ஓடியவர் அகப்பட்டார்?தொழில் நட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்திற்கு கடல்வழியாக சட்டவிரோத படகில் சென்ற மூவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரை பகுதிக்கு யாழ்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாரிழைப் படகில் இவர்கள் பயணித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (45) அவரது மனைவி சல்மா பேகம் (35) அவர்களது மகன் அன்சார் (10) ஆகிய மூன்று பேரும் கோடியக்கரை சவுக்கு காட்டில் வந்து இறங்கினர் என தெரியவந்துள்ளது.

இம்மூவரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

No comments