15கிலோ போதைபொருள் கடத்தும் கழுகு?அங்கொட லொக்கா போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட கழுகு மிருகக்காட்சி சாலையில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

பாதாள உலக குழு ‘ அங்கொட லொக்காவின் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வயிற்று கடல் கழுகு, பிற கழுகுகளுடன் சேர்த்து தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் COVID19 தொற்றால் தெஹிவளை மிருகக்காட்சிசாலை தற்போது மூடப்பட்டுள்ளது, ஆனால் மிருகக்காட்சிசாலை மீண்டும் திறக்கப்படும் போது கழுகு பொதுமக்களுக்கு காட்சிக்கு வைக்கப்படும்.

மீகொட ஹெட்டியாவத்த பகுதியிலிருந்து கடந்த ஜுலை மாதம் மீட்கப்பட்டது. இந்த கழுகு வெளிநாடு ஒன்றிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது.

கழுகு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்குமாறு முன்பு உத்தரவிடப்பட்டது. .

No comments