மாமுனையில் பொதுமகன் வெட்டிக்கொலை?


கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் இனம் தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவரே வாள்வெட்டில் உயிரிழந்துள்ளார்.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக பளை போலீசார் தெரிவித்தனர்.


No comments