கோத்தாவிற்கு அடுத்து சவேந்திரசில்வா?



பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் கோவிட்-19 வைரஸால் தீவிரமடைந்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் கோத்தபாயா ராஜபக்சே  இராணுவ சகபடியான லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா இலங்கையின் சிவில் நிர்வாக கட்டமைப்பின் சக்தி மிக்க மனிதராக உருவாகி வருகிறார்.

இலங்கையில் அரச அதிகாரிகள் சிவில் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறார்கள். ஆனால் இப்போது, அமைச்சரவை அமைச்சர்களையும் பாராளுமன்றத்தையும் கடந்து செயலாற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன . இந்த ஜனாதிபதி செயலணிகள் பலவற்றில் லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா தலைவராக அல்லது உறுப்பினராக பெயரிடப்பட்டு இருக்கிறார். குறிப்பாக

1. பசில் ராஜபக்சே தலைமையிலான பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு (Economic Revival and Poverty Eradication) தொடர்பான ஜனாதிபதி செயலணியில் லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா அங்கம் வகிக்கின்றார்


2. இலங்கையின் COVID-19, தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் (National Operation Centre) தலைவராகவும் லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா செயல்பட்டு வருகிறார்


3. இலங்கையின் தேசிய விளையாட்டு வீரர்கள் தேர்வுக் குழுவின் (National Sports Selection Committee) தலைவராகவும் லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டு இருக்கிறார்


4. கொரோனா 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் (Presidential Task Force on COVID-19) உறுப்பினராகவும் லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா இருக்கிறார்


5. அதே போல தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினராகவும் (National Sports Council) லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டு இருக்கிறார்


6. பாதுகாப்பான நாடு, நல்லொழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் (Presidential Task Force to build a Secure Country, Disciplined, Virtuous and Lawful Society) உறுப்பினராகவும் லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டு இருக்கிறார்


7. வாழ்வாதாரத்திற்கான விநியோகங்களை மேற்பார்வை செய்து ஒருங்கிணைக்கும் ஜனாதிபதி செயலணியின் (Presidential Task Force to direct, coordinate and monitor the delivery of continuous services for the sustenance of overall community life in Sri Lanka) உறுப்பினராகவும் லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா செய்லபடுகிறார்


8. இது தவிர மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்சி தலைமையிலான Multi-Purpose Development Task Force யிலும் லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா செயல்ப்பட்டு வருகிறார்


லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வா அவர்கள் கோத்தபாயா ராஜபக்சே அவர்களோடு Gajaba Regiment இன் முதலாவது பட்டாலியனில் மாத்தளை மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு பணியாற்றியவர் என சொல்லப்படுகிறித்து . இவர்கள் இருவரும் JVP கிளர்ச்சியின் போது ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் மாத்தளையில் கொலை செய்யப்பட்ட (காணாமல் ஆக்கப்பட்ட) சம்பவத்தின் சூத்திரதாரிகளாக கருதப்படுகிறார்கள் . இது தவிர 2006-2009 காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பகுதியில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை புரிந்த குற்றச்சாட்டுகளும் இவர் மீது இருக்கிறது . இந்த காலப்பகுதியில் நடைபெற்ற ஆயிரக்ணக்கான கொலைகள், கடத்தல்கள் என்பவற்றோடு லெப்டினட் ஜெனரல் சவேந்திரா சில்வாநேரடியாக தொடர்பு பட்டு இருக்கிறார்.


No comments