பைத்தியக்கார சதிக் கோட்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் - ஒபாமா


நாட்டில் பிளவுகளை அதிகப்படுத்திய பைத்தியச் சதிக் கோட்பாடுகளின் கலாச்சாரத்தை மாற்றியமைப்பதில் அமெரிக்கா ஒரு பொிய பணியை எதிர்கொள்ளவிருக்கிறது என முன்னாள் அமொிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்:

அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் காலத்தில் முன்பு இருந்ததை விட அமொிக்கா மிகவும் பிளவுபட்டுள்ளது. ஜோ பிடனின் வெற்றி அந்தப் பிளவுகளைச் சரி செய்வதற்கான தொடக்கமாக அமைபும். இப்பிளவுகளை மாற்றியமைக்க அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல்கள் எடுக்கும் என்றார்.

ஒரு தேசத்தைக் கையாள்வது அரசியல்வாதிகளின் முடிவுகளுக்கு மட்மே விடப்பட முடியாது. கட்டமைப்பு மாற்றம் மற்றும் மக்கள் ஒருவருக்கொருவர் செவிசாய்ப்பது ஆகியவை தேவைப்படுகிறது.

பொதுவாக உண்மைகளின் தொகுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அடுத்த தலைமுறையின் அதிநவீன அணுகுமுறைகளில் பெரும் நம்பிக்கையை காண்கிறேன். உலகத்தை மாற்றக்கூடிய அந்த எச்சரிக்கையான நம்பிக்கையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். அது மாற்றத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments