மரவேலை நிலையம் எரிந்தது!


வாளைச்சேனையில் மரவேலை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வாழைச்சேனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்கு அருகில் உள்ள இந்நிலையத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத் தீ விபத்தில் அங்கிருந்த பெறுமதியான பல மரங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன. தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த மரவேலை நிலையம் முகம்மட் ஹனீபா முகம்மட் சமீம்  என்பவருக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments