நாடாளுமன்றிற்கும் சென்றது கொரோனா?


கொழும்பு – பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற விவகார அலுவலக ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இதன்படி குறித்த அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யபடவுள்ளது.


அதேபோன்று கம்பஹா – மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றொருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.


குறித்த பொலிஸ் நிலையத்தில் உணவகம் ஒன்றை நடத்திவரும் 55 வயதுடைய ஒருவருக் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவரது மகன் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த நிலையில், அவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.


இந்நிலையிலேயே மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உணவக உரிமையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார். இவரது சிறிய தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.


No comments