65 பேர் இன்று உயிரிழப்பு! மேலும் 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


தமிழகத்தில் புதிதாக இன்று 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் உட்படத் தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 5,622 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு, 6,14,507ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 73 லட்சத்துக்கும் அதிகமானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று 5,596 பேர் உட்பட இதுவரை 5,58,534 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 9,718ஆக அதிகரித்துள்ளது.

சமீப நாட்களாகச் சென்னையில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று (அக்டோபர் 3) 1,364 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,71,415

ஆக அதிகரித்துள்ளது. கோவையில் இன்று 486 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

 

No comments