கார்க்குண்டு தாக்குதல், துப்பாக்கிசூடு, 15 பேர் பலி!


ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற கார்குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான் அமைப்புகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கானிகில் மாவட்டத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலில், 15 பேர் கொல்லப்பட்டனர்.

30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது குறித்த விவரங்களை நங்கர்ஹார் மாகாண செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு உள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: மாவட்ட தலைமையக கட்டிடத்தின் நுழைவாயிலில் கார் குண்டு ஒன்று வெடித்தது. பலர் ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தினர். பின்னர் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றனர்.  ஆனால் அவர்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறினார்.

 

No comments