சவேந்திர சில்வாவின் அமெரிக்கத் தடையை நீக்குமாறு வலியுறுத்துங்கள் - சஜித்


சிறீலங்கா இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையினை நீக்குவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்போம்பியோவுடனான சந்திப்பில் கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான போது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினா இதனை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்போம்பியோ இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த பயணத்தின்போது சில முக்கிஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் இராணுவத்தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பயணத்தடையை நீக்குமாறு கோர வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்தன, பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடத்தில் யோசனை முன்வைப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, மைப்போம்பியோவை நேரில் சந்தித்து அவர் வெளியேறுவதற்கு முன்னர் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரினார்.

எதிர்கட்சி தலைவர் வெளியிட்ட கருத்து சிறந்தது, ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கை வெளிவிவகார அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட போது அதனை தெரிவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இதுவொரு சிறிய கோரிக்கை என குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், சவேந்ர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு தாமே கோரியதாக சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இராணுவத் தளபதி சவேந்ர சில்வா ஆகியோர் நன்கு அறிவார்கள் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் தினேஸ் குணவர்தன, கடந்த ஆட்சி காலத்தில் ஜெனிவாவிற்கு சென்று இராணுவத்திற்கு எதிரான செயற்பட்ட விதம் தொடர்பில் நன்கு அறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments