பிரான்சில் தேடுதலுக்கு உள்ளாகும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் வீடுகள்!


நபிகள் நாயகத்தின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை அவரது மாணவர்களுக்குக் காட்டிய ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய டஜன் கணக்கான இஸ்லாமிய தீவிரவாதிகளின் வீடுகளில் பிரெஞ்சு காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

விசாரிக்கப்பட்டவர்களில் சிலர் சாமுவேல் பாட்டியின் கொலையாளிக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டதாக நம்பப்படுகிறது. அத்துடன் 51 பிரெஞ்சு முஸ்லீம் சங்கங்களை விசாரிக்கப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செச்சென் வம்சாவளியைச் சேர்ந்த மாஸ்கோவில் பிறந்த 18 வயது சந்தேக நபருக்கு ஆசிரியரான சாமுவல் பாட்டி அல்லது பள்ளியுடன் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

No comments