மெய்ப்பொருள் காண்பதறிவு

தொடரும் தமிழர்களின் நிலஅபகரிப்புக்கள் மகாவலி எல் வலயப்பிரச்சனை ஆகிய தொடர்பாக தமிழ்மக்களின் பிரதிநிதிகள் ஒற்றுமையாக கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

இப் புகைப்படத்தில் அவர் இருக்கின்றார் இவர் இருக்கின்றார் அவர்களுடன் இவர்களா? என்று கருத்திடுவதில் எந்த ஒரு அர்த்தப்பாடும் இல்லை. தொடருகின்ற தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனை தொடர்பான இவ் ஒற்றுமையான ஒன்றுபட்ட சந்திப்பு காலத்தின் தேவை. 

ஆக இதனை விமர்சனம் செய்வதை விட வரவேற்பதே சிறப்பானது அதுவே தேவையுமானது.

ஆனால் இவ்வாறு காலத்தின் தேவைகருதிய ஒரு சிறப்பான வரவேற்க கூடியவிடயம் நடைபெற்றும் அதை சிலர் விமர்சனம் செய்கின்றார்கள் என்றால் அதன் தாற்பரியத்தினையும் பார்க்க வேண்டும்.

இன்று இவ்வாறான ஒரு ஒற்றுமையான பெறுமதியான கலந்தரையாடல் நடைபெற்ற போதும் அதில் அவர் உள்ளார் இவர் உள்ளார் அவர்களுடன் இவர்களா? என்று மற்றவர்கள் எம்மை விமர்சனம் செய்கின்றார்கள் என்றால் அக் கலாசாரத்தை உருவாக்கி விட்ட பெருமைய எமமையே சாரும்.

ஏன்எனில் கடந்காலங்களில் நாம் இவ்வாறுதான் பல முகநூல் போராளிகளை உருவாக்கி வளர்தெடுத்து அவருடன் இவர் நிற்கின்றார் ஆக இவர் கொள்கை இல்லாதவர். அவர்போய் இவரைச் சந்தித்திருக்கின்றார் ஆகவே அவர் துரோகி என்று விமர்சனம் செய்யும் ஒரு பழக்கமுறையை உருவாக்கினோம். 

அந்தவகையிலான விமர்சனங்களுக்கும் துரோகி பட்டங்களுக்கும் பயந்து பயந்து தலைதெறிக்க ஓடியோர் பலர்.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் மரண நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுடலைக்கு போதவற்கு வாகன வசதி இல்லாமல் நின்ற பொது அவரை தனது வாகனத்தில் சுடலைக்கு கொண்டு சென்று இறக்கியதற்காக விமர்சிக்கப்பட்டவர்களும் உள்ளார்கள்.

அண்மையில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் பிறந்ததினம். இரவு 12 மணிக்கு குறித்த மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்றிருந்தோம். அப்போது வந்த இன்னொரு மாநகர சபை உறுப்பினர் வீதியில் நின்றவாறு எம்முடன் நின்ற ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பெடுத்து யார் யார் நிற்கின்றீர்கள். வந்தால் புகைப்படம் எடுப்பீர்களா? அதை முகப்பு புத்தகத்தில் போடுவீர்களா? என்று கேட்டு விட்டு புகைப்படம் எடுப்பீர்கள் என்றால் நான் வரவில்லை என்று திரும்பி போன நிலமையும் உண்டு. நாங்கள் நிற்கின்றோம் எங்களுடன் நின்று புகைப்படம் எடுத்து அது வெளியில் வந்தால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று நினைத்து வரமல் சென்று விட்டு நாங்கள் அனைவரும் சென்ற பின்வந்து குறித்த உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சம்பவங்களும் நிகழ்திருக்கின்றன. இதற்கு காரணம் எம்முடன் புகைப்படங்களில் தோன்றினால் அது பொதுவெளியில் வரும் போது தாங்கள் கேள்விக்குட்படுத்தப்படலாம் என்ற நிலை இருந்திருக்கலாம்

கொரோனா தொற்றுக்காலத்தில் எமது மக்களின் இடர்கால நிலையினைப் போக்குவதற்கு ஒரு நிறுவனம் சார்பாக பணியாற்றிக் கொண்டிருக்கையில் முற்றுமுழுதாக இராணுவ முற்றுகைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு உணவினை வழங்கும் போது எடுக்கப்பட்ட படத்தில் இராணுவம் நின்றது என்ற ஒரு காரணத்தினை வைத்து என்னையும் ஜெயபாலன் அவர்களையும் எந்தளவுக்கு விமர்சனம் செய்ய முடியுமோ அதை விமர்சனம் என்று கூறுவதை விட எந்த அளவுக்கு தங்களுடைய வக்கிர உண்வை காட்டமுடியுமோ அந்தளவு காட்டினார்கள். காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். இனப்படுகொலை இராணுவத்திற்கு முண்டு கொடுத்தீர்கள். இராணுவத்திற்கு வெள்ளைடியத்தீர்கள் சிவப்பு ஆக்கினீர்கள் என்று ஏதோ எல்லாம் எழுதினார்கள். எதைப்பற்றியும் நான் அலடிக்கொள்ளவில்லை. அலடிக்கொள்ளப்போவதும இல்லை. அன்று நடைபெற்ற இச்சம்பவத்தையும் இன்று நடைபெற்ற இச் சம்பவத்தையும் நான் ஒன்றாக எடை போடவில்லை. என்னுடைய கருத்து எந்த ஒரு வியடத்தையும் அதன் தன்மை அதன் நிலமை அறிந்து விமர்சிப்பதே சிறப்பானது.

ஒருமுறை எமது நல்லூர் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் மக்களின் மின்குமிழ் பிரச்சனை தொடர்பான ஒரு கோரிக்கை கடிதத்தை கௌரவ முதல்வரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்ததற்காக அவர் விமர்சிக்கப்பட்டார்.

ஆக அன்று பல முறை பல தடவை அவர்களுடன் பேசவேண்டாம் அது கொள்கை பிழை. அவர்களுக்கு முகப்பு பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டாம் அது கொள்கை மீறல் என்று ஒரு கருத்தியலை உருவாக்கியதன் பின்னணியே இன்று நாம் ஒரு நல்ல விடயத்தில் பங்குபற்றும் போதும் அது எம்மைத் தாக்குகின்றது. 

இப்பதிவு சிலவேளைகளில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம் ஆனால் கடந்தகாலங்களில் சிறுபிள்ளைத்தனமாக நடந்த விடயங்கள் தான் இன்று இனத்தின் இருப்பு தொடர்hபன ஒற்றுமையான முக்கிய கலந்துரையாடலைக் கூட சிறுபிள்ளைத்தனமாக விடயமாக பாக்கின்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இன்று தமிழ்மக்கள் பிரதிநிதிகளின் இவ் ஒன்றுபட்ட முயற்சி காரணமாக வடக்கு கிழக்கில் மகாவலி அதிகார சபையின் ஊடான காணி அபகரிப்புக்களை நிறுத்துவது எனவும் மேய்சல் தரை விவகாரத்தை ஆராய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. 

இவ்வொற்றுமையான பயணமே எமது இனத்தின் தன்னிகரற்ற இருப்பை உறுதி செய்யும் ஆக எமக்குள்ளான சிறுபிள்ளைத்தானமாக விமர்சனக் கலாச்சாரங்களையும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளையும் நிறுத்தி விட்டு இனத்தின் இருப்பிற்காக ஒன்றுபட்டு ஒற்றுமையாக பயணிப்போம் நாம் உருவாக்கிய சில விமர்சன கலாசாரங்களை புதைத்து விட்டு.

No comments