கோத்தாவிற்கு திருநீறடிப்பு: அச்சத்தில் தெற்கு?


காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் நேற்று முன்தினம் விபூதியை தூவினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளுக்கு முன்னர் சந்தியா எக்னெலிகொட, முகத்துவாரம் காளியம்மன் கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்து அங்கு வழங்கப்பட்ட விபூதியை நீதிமன்ற வாயிலில் தூவியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு கொழும்பு புறநகர்ப் பகுதி ஒன்றில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் காணாமல்போயுள்ளார். இந்தச் சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் படையினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

No comments