800 படத்தை திரையிட விடமாட்டோம் - மன்சூர் அலி கான்


இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பலைகள் கொந்தளித்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் இதுபற்றித் தெரிவிக்கையில்,

“விஜய்சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால் இந்தப் படத்தை வெளியிட விடமாட்டோம். ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வெறுப்பை விஜய்சேதுபதி சம்பாதித்துள்ளார்” என்றுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பலைகள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக டுவிட்டரில் #shameonvijaysethupathi என்ற ஹாஸ்டக் மூலமாமூலமாக இந்திய அளவில் எதிர்ப்பு போஸ்ட்கள் மக்களால் போடப்பட்டு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments