மன்னார் விடுவிப்பு?


இலங்கை இராணுவத்தினரது இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறுவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்ததி தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 320 பேருக்கான  கொரோனா தொற்று  பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இன்றைய ஆய்வின் போதே இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்தவர்கள்  அறுவரை தவிர ஏனையோருக்கு தொற்று இல்லை என யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூட பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டு இருக்கின்றது.

எனினும் படையினரது தனிமைப்படுத்தல் மையங்களில் தென்னிலங்கையை சேர்ந்தவர்களே தங்கவைக்கப்பட்டு;ள்ளனர்.

இதனிடையே மன்னார் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள இரு கிராமங்களும்  இன்று மாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 7 பேர் பட்டித்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட நிர்மாண பகுதியிலே தங்கி உள்ளனர்.

ஒருவர் மன்னார் நகரில் வரையறுக்கப்பட்ட வீடு ஒன்றில் தங்கி இருந்தார். இவர்களில் 5 பேர் நேற்று இரவு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஏனைய மூவரையும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இது வரையில் முதல் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 103 பேரும், இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments