கசிப்புடன் மட்டக்களப்பில் பெண் கைது!


மட்டக்களப்பில் கசிப்பு வைத்திருந்ததாகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மட்டக்களப்பு கதிரவெளியில் அமைந்துள்ள வீடு ஒன்றைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது வியாபாரத்திற்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட 10 போத்தல்களுடன் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

கசிப்பு வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் முன்நிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

No comments