மகிந்த ஆட்சி ஆதரவுடன் கொரோனா?


சர்ச்சைக்குரிய ஆடை தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து சரளமாக இந்தியர்கள் வந்து சென்றதை சிங்கள செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 22 ம் திகதி அன்று இந்தியாவின் பிராண்டெக்ஸிலிருந்து மத்தள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். விமானத்தில் பாதுகாப்பு முகமூடிகள் எதுவும் வைக்கப்படவில்லை. மத்தள விமான நிலையத்தில்  முகமூடிகள் எதுவும் அணியப்பட்டமை தொடர்பில் வினவப்படவுமில்லை. எனவே இந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை பின்பற்றினர் என்று நாம் கருத வேண்டுமா? ஏன கேள்வி எழுப்பபட்டுள்ளது.

இதனிடையே மினுவாங்கொட பகுதியில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ள பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், இந்தியர்கள் அல்லது வேறு எந்த வெளிநாட்டினரும் மினுவாங்கொடவிலுள்ள எமது தொழிற்சாலைக்கு இந்த காலகட்டத்தில் வந்திருக்கவில்லையென்பதை உறுதி செய்கிறோம். இதேபோல, இந்தியாவிலிருந்து எந்த துணி வகைகளையும் கொள்வனவு செய்யவோ, அவற்றை பாவிக்கவோ இல்லையென்பதையும் உறுதி செய்கிறோம்.

இந்தியாவிலுள்ள பிரண்டிக்ஸ் நிறுவன கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் நாடு திரும்புவதற்கு, விசாகப்பட்டினத்திலிருந்து விமான சேவை நடைபெற்றமு.

நாடு திரும்பிய எமது ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் இலங்கை அரச நடைமுறைப்படுத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக கடைப்பிடித்தார்கள். பிசிஆர் பரிசோதனை, அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் 14 நாள் தனிமைப்படுத்தல், பின்னர் பிரதேச சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் 14 நாள் சுயதனிமைப்படுத்தலை மேற்கொண்டனர்.இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எமது ஊழியர்கள் யாரும் மினுவாங்கொட தொழிற்சாலைக்கு வரவில்லை.

அத்துடன், நிறுவனத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பின்னர், நிறுவன ஊழியர்களை பணிக்கு வருமாறு வற்புறுத்தப்பட்டதாக பரவும் வீடியோ காட்சியை நிராகரிக்கிறோம். அதில் தோன்றும் யாரும் பிரண்டிக்ஸின் ஊழியர்கள் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments