சீனா வேறு நோக்குடன் உள்ளது - மைக் பொம்பியோ


அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சீனா வேறு நோக்குடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சில் நடத்திய, கூட்டு ஊடக சந்திப்பின்போது மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடல் சக்திமிக்கதும் சாதகமானதாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவானதாகும்.

இலங்கை அபிவிருத்தியுடன் இறைமை மற்றும் சுயாதீன தன்மையுடைய நாடாக இருக்க வேண்டும்.

இலங்கைக்கு இடையிலான பொருளாதாரத்தை பலமாக்குவது தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஆசியாவில் பிரதான ஜனநாயக நாடான இலங்கையில் அமெரிக்காவின் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும்.

பாதுகாப்பு ஆதரவு தொடர்பாக முழுமையாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments