கைக்குண்டுடன் யாழில் கைது?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார்

தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுள்ளதை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன் போது அவரது உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதுடன். அவர் உடனடியாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments