மீண்டும் மணல் தாதாக்கள்?


யாழ்ப்பாணம் வரணிப் பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவர்களிற்கு பாதை விட மறுத்தவர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது வரணியை சேர்ந்த கே.கலாசுதன் (வயது 46)  என்பவரே தாக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வரணிப்பகுதியில் திருட்டு மணல் ஏற்றியவாறு ஐந்து உழவு இயந்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து பயணித்துள்ளன. அதன்போது அப்பாதையால் இரவு வீடு நோக்கிப் பயணித்தவர் அதனை அவதானித்து கேள்வி கேட்டுள்ளார். இதன்போது திருடஉழவு இயந்திரத்தில் மணல் ஏற்ற வைத்திருந்த மண் வெட்டியினால் தாக்கியுள்ளனர்.


No comments