கோத்தா அரசில் சர்வதேச பயங்கரவாதியான றிசாட்?


முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை சர்வதேச தீவிரவாதி வரிசையில் பிரச்சாரப்படுத்தி வரும் இலங்கை அரசு மறுபுறம் முஸ்லீம்களை கொரோனாவை காரணங்காட்டி ஒடுக்க முற்பட்டுள்ளது.

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அந்த 30 பேரும் கல்லூரிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே குற்றப்புலனாய்வு பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம், கொழும்பிலுள்ள வீட்டில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (15) இரவு இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மறுபுறம் ரிசாத் பதியூதீனை, காலந்தாழ்த்தாது கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர், சி.ஐ.டிக்கு கட்டளையிட்டுள்ளார்.


இதனிடையே ரிசாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments