ரிஷாத் தலைமறைவு! தொடர்ந்தும் வலைவீச்சு! முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுனை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும் அவர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளார். 48 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் அவரை கைது செய்ய முடியவில்லை. ரிஷாத் பதியுதீனை தேடி கொழும்பின் கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு உட்பட வெள்ளவத்தை, மன்னார் பகுதிகளிலும் விஷேட தேடுத்ல்கள் நடாத்தப்பட்ட போதும் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அத்துடன் அவருடன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர் சம்சுதீன் முகமது யசீனையும் கைது செய்ய முடியவில்லை. இவ்விருவரையும் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி பிரதீப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் கீழ் 6 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் , அதற்கு மேலதிகமாக புலனாய்வுத்துறையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட மா அதிபரால் அவரைக் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுனை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  எனினும் அவர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளார்.

48 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும்  அவரை கைது செய்ய முடியவில்லை. ரிஷாத் பதியுதீனை தேடி கொழும்பின் கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு உட்பட வெள்ளவத்தை, மன்னார் பகுதிகளிலும் விஷேட தேடுத்ல்கள் நடாத்தப்பட்ட போதும் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அத்துடன் அவருடன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர்   சம்சுதீன் முகமது  யசீனையும் கைது செய்ய  முடியவில்லை.

இவ்விருவரையும் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி பிரதீப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் கீழ் 6 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் , அதற்கு மேலதிகமாக புலனாய்வுத்துறையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த  வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில்  சட்ட மா அதிபரால் அவரைக் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.No comments