முல்லையில் விபத்து! வீதிப் போக்குவரத்து அதிகாரி பலி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு சிலாவத்தை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து கடமையிலிருந்த வீதிப்

போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதிப் போக்குவரத்து கடமையின் போது வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரமொன்றை நிறுத்துமாறு சைகை காண்பித்தபோது சாரதி உழவியந்திரத்தை நிறுத்த முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் கம்பளை மாவட்டத்தினை சேர்ந்த முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதுடைய கேமந்த என்ற வீதிப் போக்குவரத்து காவல்துறை அதிகாரியே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவத்தின் உழவு இயந்திரத்தின் சாரதி முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments