வடமராட்சியில் கல்வி நிலையங்கள் சீல் வைப்பு?


நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட வடமராட்சி பகுதியில் கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் இயங்கிய இரு தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டினை சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது.

தற்போது கோவிட் 19 அதிகரித்தலையடுத்து இலங்கை அரசாங்கத்தினால் தனியார் கல்வி நிலையங்களை மீள் அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தலைக் கருத்தில் கொள்ளாது தொடர்ந்தும் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பிலேயே இந்த கல்வி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு அமைய நெல்லியடி சுகாதார பரிசோதகரால் இத் தனியார் கல்வி நிறுவனங்கள் இரண்டிற்கும் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments