மக்களை தேடி மீண்டும் தலைவர்கள்?


தேர்தலின் பின்னராக மக்களிற்கு ஏதும் செய்தார்களோ இல்லையோ மக்களை தேடி சந்திப்பதாக படங்காட்ட அரசியல்வாதிகள் பின்னிற்கவில்லை.

ஒருசாரார் கொழும்பில் செற்றிலாகிவிட இன்னொர சாரார் மக்கள் சந்திப்பில் மும்முரமாகியுள்ளனர்.

ஒருபுறம் இழந்த ஆதரவை மீள பெறல் இன்னொரு புறம் உட்கட்சி மோதல்களை மூடி மறைக்க கட்சிகள் மக்களை சந்தித்துவருகின்றன.


ஒருபுறம் தமிழரசின் எம்.ஏ.சுமந்திரன் வீட்டிலிருந்தவாறாக ஊடக சந்திப்புக்களை நடத்த மறுபுறம் சிறீதரனோ பூநகரி பள்ளிக்குடாவில் நேற்று வீடுகளுக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் மக்களின் குறைகளை கேட்டறியவும் முற்பட்டுள்ளார்.

இன்னொருபுறம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போனஸ் ஆசன எம்பி செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் மக்கள் குறைகேள் செயற்பாடுகளின் சந்திப்புகள் வடமராட்சி மண்ணில் நடந்துள்ளது.


No comments